ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கரையோரப் பிரதேசங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனுடன் ஊவா மாகாணத்திலும் களுத்துறை, இரத்தினபுரி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் அதிக வெப்பமான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே அதிக வெப்பமான வானிலையால் களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இயன்றளவு நீரை பருகுமாறும், நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.