அசைவ உணவுகளில் இறால் மிகவும் சுவையானது. இன்று உங்களுக்காக எளிய முறையில் இறால் சேமியா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான சேமியா இறால் பிரியாணி
தேவையான பொருட்கள்
சேமியா – 2 கப்
இறால் – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி புதினா – தேவையான அளவு
பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை – 1
தயிர் – 1 கப்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம் – 1
செய்முறை :
இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நன்றாக கழுவிய இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா பவுடர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள, தயிர் சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேமியாவை போட்டு முக்கால் பாகம் வேக வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
பூண்டு இஞ்சி பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளிவை சேர்த்து வதக்கவும்.
அடுத்து புதினா, கொத்தமல்லி மற்றும் சீரக பவுடர் சேர்த்து வதக்கவும்.
பின்னர் ஊறவைத்த இறாலை சேர்த்து வதக்கி, இறாலில் உள்ள தண்ணீர் வற்றி வேகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் முக்கால் பாகம் வேகவைத்த சேமியாவை இறாலுடன் சேர்த்து கிளறவும்.
நன்கு உதிரியாக வரும் பருவத்தில் இறக்கி பரிமாறவும்.
சுவையான சேமியா இறால் பிரியாணி ரெடி.