Loading...
கலைஞர்களின் நலனுக்காக தேசிய நிதியமொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சிக்னிஸ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
Loading...
திரைப்படத்தினூடாக நாட்டின் பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் கலைஞர்களின் நலன்களுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் இல்லை.
எனவே கலைஞர்களின் நலன்களை பேணுவதற்காக இந்த நிதியம் நிறுவப்படுவதாகக் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Loading...