எல்பிட்டிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றை மர்ம நபர் ஒருவர் ஓட்டிச் சென்றமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இல்லாத நிலையில் பேருந்தை ஓட்டி சென்ற அடையாளம் தெரியாத நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உடுகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து நீர்கொழும்பு நோக்கி செல்வதற்கு உடுகம டிப்போவில் இருந்து பயணித்துள்ளது.எல்பிட்டிய பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திய சாரதி மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.
இதன்போது பேருந்தில் ஏரிய மர்ம நபர் பயணிகளுடன் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார் என பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த நபர் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை பேருந்தை ஓட்டி சென்ற நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் முச்சரவண்டி ஒன்றின் உதவியுடன் பேருந்தை துரத்தி சென்று பிடித்துள்ளனர்.அத்தோடு சந்தேகநபரை எல்பிட்டிய பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்