பிரிட்டனில் நரி ஒன்று கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்து தனது உயிரை விட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மூவாயிரம் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த பண்ணையின் கூண்டுக்குள் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நரி உள்ளே நுழைந்தபிறகு கதவுகள் மூடிக்கொண்டன. கோழிகளிடம் சிக்கிய அந்த இளம் நரி அங்கே தனது உயிரைவிட்டது.
கூட்டு மந்தையுணர்வால் அவை அந்த நரியை கொத்திக் கொன்றிருக்கின்றன என கிராஸ் சீன் விவசாய பள்ளியின் துறை தலைவர் பாஸ்கல் டேனியல் தெரிவித்துள்ளார்.
கோழிகள் பகல் பொழுதில் கூண்டில் அடைத்து வைக்கப்படாமல் வெளியே நேரத்தை செலவிடும். இரவில் மீண்டும் அந்த பெரிய கூண்டுக்குள் அடைத்து வைக்கப்படும். பகல் பொழுதில் கூண்டின் கதவுகள் திறந்தே இருக்கும்.
கதவுகள் திறந்திருந்த நேரத்தில் நரி உள்ளே சென்றுருக்கலாம் என பணியாளர்ள் தெரிவிக்கின்றனர்.
எனினும் குறித்த கூண்டிற்குள் கோழிகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் கூட்டமாக உள்ளே நுழைந்து நரியை பார்த்த அதிர்ச்சியில் இவ்வாறன சம்பவம் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்ககது.