தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சிறுவனை துணிச்சலுடன் தன் உயிரை பணயம் வைத்து இளைஞர் ஒருவர் மீட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் என்ற நகரில் ஓடும் ஜூக்ஸெகி என்ற நதி உள்ளது. இந்த நதியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த வெள்ளப் பெருக்கின் நடுவே ஒரு இரும்புக் குழாயின் நடுவே 6 வயது சிறுவன் ஒருவன் சிக்கிக் கொண்டு பயத்துடன் அழுதபடி இருந்தான்.
இதனை பலரும் வேடிக்கை பார்த்த நிலையில் இதனைக் கண்ட யூசுப் அம்பர்ஜி என்ற ஒரு இளைஞர் சிறிதும் பயமின்றி துணிச்சலுடன் தன் உயிரை பணயம் வைத்து குழாயில் உட்கார்ந்தபடியே மெதுவாகத் தவழ்ந்து தவழ்ந்து சென்று அந்தச் சிறுவன் அருகில் சென்று அவனை தனது முதுகில் கட்டியணைத்தபடி அந்தப் பாலத்தை மெதுவாக கடந்து வந்தார். இளைஞனின் இந்த துணிச்சல் செயலை கண்டு அங்கிருந்தவர்கள்அவரை வெகுவாகப் பாராட்டினர்.