இன்றைய பொழுதில் முகநூல் என்பது பலரை தனக்கு அடிமையாக்கி வைத்துள்ளது. இது பலருக்கு நன்மையாகவும், சிலருக்கு தீமை விளைவிப்பதாகவுமே உள்ளது.
முகநூல் மூலம் சீரழிந்தவர்கள் இருக்கும் பட்சத்தில், இதன் மூலம் சமூகத்தில் பெயரும் புகழும் பெற்று சிறப்பாக வாழ்ந்தவர்களும், இருக்கத்தான் செய்கின்றனர்.
சரி, தற்போது கதைக்கு செல்லலாம், இது ஒரு முகநூல் காதல்..
முகநூல் மூலம், ராஜா என்ற ஐடியில் பணிபுரியும் இளைஞரும், ஜெனிஃபர் என்ற கல்லூரிப் பயிலும் பெண்ணும் நட்பாகின்றனர். இருவரும் தினமும், பேசத் தொடங்கி அவர்கள் நட்பு நேரில் சந்தித்து பேசும் அளவுக்கு சென்றது.
நாட்கள் நகர இருவரின் நட்பு காதலாக மலர்ந்தது… ( ஜெனிஃபரின் காதல் அளவுக்கு ராஜாவின் காதல் உண்மை அற்றதாகவே இருந்தது.)
காரணம், முகநூலில் அறிமுகமாகும் யாவும் உண்மை இல்லாதது எனும் அவனது மனப்பான்மையே….
ராஜா, ஜெனிஃபரிடம் பேசுவதை தினசரி பொழுதுபோக்காகவே நினைத்துக் கொண்டிருக்க, ஆனால் அவளோ நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக காதலித்து உருகிக் கொண்டிருந்தாள்.
இப்படியே சில நாட்கள் நகர, திடீரென்று ராஜாவிற்கு வேறுப் பொண்ணோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், தனக்கு நிச்சயம் ஆன விடயத்தை மறைத்து ஜெனிஃபரிடம் பழகிக் கொண்டிருந்தான்.
இந்நிலையில், திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில், திருமண அழைப்பிதழ் அவனது நன்பர்களால் அவனது முகநூலில் Tag செய்யப்பட்டது. அதன் பின்னரே ஜெனிஃபருக்கு ராஜா திருமணம் பற்றித் தெரிய வந்தது.
அவன் பெற்றோர்களின் கட்டாயத்தில் தான் ராஜா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இருவரும் சந்தித்து பேசினர்.
ஜெனிஃபர்……. உனக்கு கல்யாணம்னு ஏன் சொல்லல
ராஜா … உனக்கு ஏன் சொல்லனும்..
ஜெனிஃபர்….. டேய் நாம love பன்றோம்டா..
ராஜா … என்ன லவ் வா.. சிரிப்பு காமிக்காத…
ஜெனிஃபர் ; டேய் பெண்டாட்டி, செல்லம் னு லாம் சொன்னியடா(அழுதுக் கிட்டே பேசுறா)
ராஜா … ஜெனி நாம ஒரு time pass காக பேசுனோம்.. பெருசு பண்ணாத இதுக்கு மேல நாம பேச வேண்டாம்
ஜெனிஃபர்……டேய் என்ன விட்டுட்டு போய்டாதடா… அவன் கைய பிடித்து கதறி அழுகுறா
அங்கே எதிர்பாராத விதமாக ராஜாவின் அப்பா வர ஏதும் பேசாமல் அவனை முறைத்தபடி கோபமாக சென்று விட்டார்.
ஜெனிஃபர் இன்னும் அவனது கையை பிடித்தபடி ஏங்கி ஏங்கி அழுது கொண்டு இருக்கிறாள்….
ஆனால், ராஜா அவளது கையை உதறி விட்டு நீ இருக்கும் வர என்ன நிம்மதியா இருக்க விட மாட்ட மனசுல ஏதும் தேவையில்லாம கற்பணை வளர்த்துகிட்டு திரியாத என்று கூறிவிட்டு சென்று விட்டான்.
திருமண நாள் நெருங்கியது. திருமணம் எந்த பிரச்சினையும் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிய, மாலை நேரத்தில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெனிஃபரின் தோழிகள் அவள் கொடுத்துவிட்ட பரிசுப் பொருளை ஜெனி கொடுத்துவிட்டா எனக் கூறி கொடுத்துவிட்டுச் சென்றனர்.
சில மாதங்கள் கழித்து,
ராஜாவின் மனைவி கர்ப்பமாக இருந்தால், அவளுக்கு வலைகாப்பு நடத்தப்பட்டு அம்மா வீட்டுக்கு சென்றாள்.
சில நாட்கள் நகர்ந்தன, ஒரு நாள் ராஜா மாடியில் தனியாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, டைம்பாஸாகவே நினைத்த ஜெனிஃபரின் ஞாபகம் அவனுக்கு வந்தது.
அன்று தான், ஜெனிஃபர் கொடுத்தனுப்பியதாக அவளின் தோழிகள் கொடுத்துவிட்டுச் சென்ற பரிசு நினைவுக்கு வந்தது. உடனடியாக ரூமிற்குள் ஓடிச் சென்று, பரிசை தேடி எடுத்து திறந்து பார்க்கிறான்.
அதனுள் அவனுக்கும், அவனது மனைவிக்கும், அவனுக்கு பிறக்க போகும் குழந்தைக்கும் என மூன்று மோதிரமும், உடன் ஒரு கடிதமும் இருந்தது. அக்கடிதத்தினை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
கடிதத்தில்,
அன்புள்ள …ராஜாவிற்கு,
நான் உன்ன நெனச்சி வாழல…
உனக்காக மட்டும் தான் வாழ்ந்தேன்… நான் கொடுத்த அந்த 3 மோதிரமும்.. நான் எங்க அப்பா அம்மாவுடையது…அவங்க நியாபகமா என்கிட்ட இருந்தது அந்த மோதிரம் மட்டும் தான்.
அப்பாவோட அன்பும் அம்மாவோட பாசமும் எப்படி இருக்கும்னு கூட எனக்கு தெரியாது. அத அவங்க எனக்கு கொடுக்காம சின்ன வயசிலே அனாதையா விட்டுட்டு போய்ட்டாங்க.
அந்த மொத்த அன்பும் பாசமும், உங்கிட்ட கிடைக்கும்னு நெனச்சேன்…. அதுக்கு கூட எனக்கு கொடுத்து வைக்கல… நான் நீ இருந்தா தான் சந்தோஷமா இருப்ப அப்டின்னு நெனச்சேன்.. ஆனா, நீ நான் போன தான் நிம்மதியா இருப்பேன்னு சொல்லிட்ட.
நான் போறேன்னு நீ கவலபடாத, கண்டிப்பா உனக்கு மகளா பிறந்தாவது உன் உண்மையான பாசத்த அடையாம விடமாட்டேன்..
இதை படித்ததும் ஜெனிஃபர் இறந்த உண்மை தெரிய வருகிறது.
வார்த்தை இல்லாமல், கண்கள் சிவந்து கதறி அழுதபடி சுவரில் சாய்ந்தபடி அழுதவனுக்கு.. போன் வந்தது அவனுக்கு பெண் குழந்தை பிறந்ததாக தகவல்….
மீண்டும் அவனது கண்களை கண்ணீர் பதம் பார்க்க குழந்தையை காண விரைந்தான்.. மருத்துவமனைச் சென்று பார்க்க ராஜாவின் மனைவிக்கு அழகியப் பெண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தையை கையில் எடுத்து ஜெனி, ஜெனி என்று கதறி அழுத படி முத்தமழை பொழிந்து நெஞ்சோடு அனைத்து…ஜெனி, நெசமாவே நீ என் செல்லம் தான் என் உயிர் என்று கதறி அழுதான்.
என் அன்பு, முகநூல் நண்பர்களுக்கு,
இங்கு, பொலியானவர்கள் மட்டும் இல்லை. அன்புக்காக ஏங்கும் உண்மையான உள்ளங்கள் கூட இங்கு அதிகமாகத் தான் இருக்கிறது.
முகநூலில் பொழுதுபோக்குங்கள் தவறில்லை… ஆனால் பொய்யான அன்பைக் காட்டி யாரையும் காயப்படுத்தி விடாதீர்கள்.
இப்படிக்கு
உங்களில் நான்.