நடிகர்கள், நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று தான். தற்போது தெலுங்கு மாகாணத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் தொழிலதிபர் சிக்ருபதி ஜெயராம் படுகொலை சம்பவம்.
அவர் கோஸ்டல் பேங்க், எக்ஸ்பிரஸ் டிவி ஆகிவற்றின் இயக்குனராக இருக்கிறார். கடந்த ஜனவரி 31 ல் விஜயவாடா அருகில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வைத்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.
ஜூப்லி ஹில்ஸ் பகுதி காவல் துறை இந்த சம்பத்தில் விசாரணையை நடத்தி வருகிறது. இதில் தற்போது தெலுங்கு சினிமாவை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஏற்கனவே முக்கிய குற்றவாளியாக ராகேஷ் ரெட்டி சிக்கியுல்ளார். தற்போது இளம் காமெடி நடிகர் சூர்யா பிரசாத், அவரின் உதவியாளர் கிஷோர், அஞ்சி ரெட்டி என்ற பெண் நடிகை ஆகியோரும் அடங்குவர். இதனால் தெலுங்கு பகுதிகளில் பரபரப்பு சூழ்ந்துள்ளது.