எதிர்காலத்தில் தாய் – சேய் மரண வீதத்தையும், குடிப்பேற்று மரண வீதத்தையும் குறைப்பதன் மூலமே வடமாகாண மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியுமென வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வட மாகாணத்தின் தாய் – சேய் மரண வீதமும் குடிப்பேற்று மரண வீதமும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையை கட்டுப்படுத்த தாம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.
தாய் – சேய் மரண வீதம் அதிகரிப்பதற்கான காரணம் வடக்கு மாகாணத்தில், மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான ஆளணிப் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுவதாகும்.
குறித்த மரண வீதத்தை வடமாகாணத்தில் குறைப்பதன் மூலம் தேசிய மட்டத்திலும் மேற்படி மரண வீதங்களைக் குறைப்பதற்கு தங்களாலான பங்களிப்பை வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.