பொல்கஹவெல மெத்தலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வான் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் வயோதிப பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் .
அத்தோடு அவர்களின் பிள்ளைகள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.