மனநலம் பாதிக்கப்பட்ட ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஐந்து வயது சிறுமியை 20 அடி உயரத்திலிருந்து தூக்கி விசீய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினா நாட்டின் தலைநகரான பியூனோஸ் ஏர்ஸில் ஒரு புகழ்பெற்ற இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கம் உள்ளது. அதில் அர்ஜண்டினா நாட்டின் பிரபல பாடகர் ஒருவரின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
மக்கள் கூட்டம் வழிந்த அந்த அரங்கில் சரியாக இசை நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் ஒரு சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
அப்போது, அங்கு இருந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண், கரோலீனா (5) என்னும் சிறுமியை மேல் தளத்திலிருந்து 20 அடியில் உள்ள கீழ் தளத்துக்கு தூக்கி வீசியிருக்கிறார் என தெரிந்தது.
பின்னர் அந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சிறுமியை தூக்கி வீசிய அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இது பற்றி பொலிசார் கூறுகையில், சிறுமியை கீழே தூக்கி வீசிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
மனநல மருத்துவமனையிலிருந்து எப்படியோ தப்பித்து இந்த அரங்கில் நுழைந்து இந்த காரியத்தை செய்த்துள்ளார். இது குறித்து அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச உள்ளோம் என அவர் கூறினார்கள்.
இதனிடையில், கீழே விழுந்த சிறுமி கரோலினுக்கு காயம் ஏற்பட்டிருந்தாலும் அவர் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.