இந்த 21ம் நூற்றாண்டுல ஒரு மனுஷன் காலையில ஆறு மணிக்கு எழுந்து, நைட் ஒன்பது மணிக்கெல்லாம் நிம்மதியா தூங்கிட்டான்னு சொன்னா கோவில் கட்டி கும்பிடலாம்.
அதுவும், அந்த நபர் தமிழ்நாடு, இந்தியார இருந்தா கின்னஸ் புக் ஆப் ரெகார்டுல சேர்த்துவிட்டுரலாம். ஏன்னா, நம்ம ஊருல தான் நேரங்கெட்ட நேரத்துல பணமதிப்பிழப்பு, தியானம் இன்னும் எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா எல்லாம் நடக்கும்.
இவங்க நேரங்கெட்ட நேரத்துல கண்டத கிளப்பிவிடுறது மட்டும் இல்லாம, நம்மையும் நிம்மதியா தூங்கவிடாம பண்ணிடுவாங்க. அப்பரம் சிரிப்பு பெரிய வரம்.வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போயிடும். இது நான் சொல்லலே, ஊருலகத்துல எல்லாருமே சொல்றது.
தூக்கம், சிரிப்பு இது ரெண்டும் ஒண்ணா வராது. அப்படியே ஒருத்தர் தூங்கிட்டே சிரிச்சா, ஒன்னு நல்ல நடிகனா இருக்கணும், இல்ல செம்ம போதையில இருக்கணும். சரி! அதெல்லாம் விடுங்க… நீங்க ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா கொஞ்சம் நேரம் ரிலாக்ஸா இருக்க கொஞ்ச நேரம் சிரிச்சிட்டு போங்க,