கடந்த 2017 ஆம் ஆண்டு ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு வெறுக்கப்ட்ட “வீர தமிழச்சி” என்ற நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் என்ன செய்தாலும் இவரை கலாய்ப்பதற்கேன்றே ஒரு கூட்டம் சமூக வலைத்தளத்தில் உருவானது. இதனால் கடுப்பான ஜூலி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோ ஒன்றை கூட சமூக வளைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
கடந்த சில மாதமாக ஜூலி துபாயில் தான் அதிகம் சுற்றி வந்தார். அப்போது அடிக்கடி புகைப்படங்களை கூட வெளியிட்டு வந்தார். ஜூலி துபாய் பார்த்ததற்கு முக்கிய காரணமே துபாயில் இருக்கும் மார்க் ஹம்ரான் என்பவர் தான்.
இவர் தான் ஜூலியின் பாய் பிரண்ட் என்றும் நினைத்து வந்தனர். அதே போல மார்க், ஜூலியுடன் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால், அவர் நண்டு பிராண்ட் லுங்கி விளம்பரத்தில் கூட நடித்துள்ளார். இதோ அந்த விளம்பரம்.