மட்டக்களப்பு மாவட்ட மட்ட பெண்களுக்கான எல்லே போட்டியில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம் சார்பாக பங்குபற்றிய செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
மட்டக்களப்பு மாவட்ட மட்ட பெண்களுக்கான எல்லோ போட்டி நேற்று(புதன்கிழமை) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச அணி மற்றும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச அணிக்குமிடையே நடைபெற்ற இறுத்திப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கோறளைப்பற்று தெற்கு பிரதேச அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர்ப்பற்று பிரதேச அணி 30 பந்துகளுக்கு ஆறு ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுபெடுத்தாடிய கோறளைப்பற்று தெற்கு பிரதேச அணி 30 பந்துகளில் எதுவித ஓட்டங்களை பெறாத நிலையில் தோல்வியைத் தழுவிக்கொண்டது.