இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்பு பிரதிநிதிகளுடன் கைலாகு கொடுத்து உரையாடிய விடயம் ஜெனீவாவில் உள்ள சிங்கள தரப்பினால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச தரப்பின் பிரதிநிதியாக ஜெனீவா வந்துள்ள வட மாகாண ஆளுனர் சுரேன் இராகவன், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் உரையாடியிருந்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, பிரித்தானிய தமிழர் பேரவை போன்றவை இலங்கை அரசாங்கத்தினால் தடைப்பட்டியிலில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களாக இருக்கின்றன.
ஜெனீவா மைய அமர்வுகளின் போது இத்தரப்பு பிரதிநிதிகளை எதிர்கொண்ட வட மாகாண ஆளுனர் அவர்களை தாயகம் திரும்பி, அபிவிருத்தியில் ஈடுபடுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் இலங்கை அரச பிரதிநிதியான ஆளுனர் எவ்வாறு சந்திக்கலாம் என்ற எதிர்ப்பினை சிங்கள தரப்பினர் வெளிப்படுத்தியுள்ளனர்.