அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. சிலருக்கு அது அவர்களின் வாழ்க்கை இலட்சியமாக கூட இருக்கும். திருமணம்தான் ஒரு பெண் தன் வாழ்க்கையின் உடலளவிலும், மனதளவிலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல முக்கிய தூண்டுகோலாக இருக்கிறது.
ஆண், பெண் இருவருக்குமே அவர்களின் திருமணம்தான் திருப்புமுனையாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது சரியான துணையை தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் துணை அழகானவராக இருப்பது மட்டும் முக்கியமல்ல, நல்ல பண்பாளராகவும் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் உங்கள் இல்லறம் நல்லறமாக இருக்கும். சிலருக்கு நல்ல பண்புகள் என்பது அவர்களின் பிறவி குணமாக இருக்கும்.
சிலருக்கோ வளரும் விதித்தல் தங்கள் பண்பை வளர்த்துக்கொள்வார்கள். ஒருவரின் அடிப்படை குணம் அவர்களின் ராசியை பொருத்துகூட இருக்கலாம். அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே சசிறந்த பண்பாளராகவும், சிறந்த கணவராகவும் இருப்பார்கள் என்று இங்கு பார்க்கலாம்.
சிம்மம்
இயற்கையாகவே தலைமை பண்பு கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் தைரியமான பெண்களுக்கு மிகச்சிறந்த துணையாக இருப்பார்கள்.
இவர்கள் தங்கள் துணையை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருப்பார்கள். மேலும் இவர்கள் கலை ரசனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் காதலிப்பதற்கு தங்களுக்கென தனி வழியை வைத்திருப்பார்கள். இவர்களின் சுயமரியாதைக்கு பிரச்சினை ஏற்படாதவரை இவர்களை போல சிறந்த துணையாக யாராலும் இருக்க முடியாது.
மிதுனம்
நீங்கள் எப்பொழுதும் வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால் அதற்கு மிதுன ராசிக்காரர்கள் சிறந்த தேர்வாக இருப்பார்கள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள்.
உறவு என்று வரும்போது இவர்கள் மற்றவர்களை விட மிகவும் வலிமையாகவும், அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள். இவர்களின் பேச்சுத்திறமை தங்கள் துணையை வசீகரிப்பதாய் இருக்கும். மிதுன ராசி ஆண்களை திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு நீடித்த, நம்பிக்கை மிகுந்த, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க வாய்ப்புள்ளது.
கடகம்
இவர்கள் சிறந்த குடும்ப தலைவராகவும், சிறந்த கணவராகவும், சிறந்த அப்பாவாகவும் இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் உங்களின் மதிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்த அதிக முயற்சி எடுப்பார்கள். உங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கை பற்றிய சரியான பாடங்களை அறிவுறுத்துவார்கள்.
இவர்களின் எண்ணம் எப்பொழுதும் தங்கள் குடும்பத்தை சுற்றியே இருக்கும். இவர்கள் தங்கள் மனைவியை வெறும் துணையாக மட்டும் கருதாமல் தங்கள் வாழ்க்கையின் சரிபாதியாக நடத்துவார்கள். தங்கள் துணையின் எதிர்காலத்தை வளமாக்க இவர்கள் எதையும் செய்வார்கள்.
துலாம்
பெண்கள் வாழ்க்கையில் முன்னேறவும், உயர்பதவிக்கு செல்லவும் விரும்பினால் அவர்கள் திருமணம் செய்ய வேண்டியது துலாம் ராசி ஆண்களைத்தான். ஏனெனில் இவர்களின் பொறுமையும், இணக்கமும் பெண்களுக்கு பெரிய துணையாக இருக்கும். இவர்கள் கலகலப்பானவர்களாகவும், நம்பத்தகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.
இயற்கையாகவே இனிமையான குணம் கொண்ட இவர்கள் தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். தங்கள் மனைவியை இறுதிவரை திகட்ட திகட்ட காதலிப்பார்கள். எவ்வளவு பெரிய வேலையையும் இவர்களுடன் இருந்தால் எளிதாக செய்துவிடலாம். தங்கள் துணையின் திருப்தியே இவர்களுக்கு முக்கியமானதாகும்.
விருச்சிகம்
அதிக கற்பனை திறன் மிக்க விருச்சிக ராசி ஆண்களை கண்ணை மூடி கொண்டு திருமணம் செய்துகொள்ளலாம். விருச்சிக ராசிகாரர்கள் சிறந்த கணவராக மட்டுமில்லாமல் மனைவிக்கு சிறந்த நெருங்கிய தோழனாகவும் இருப்பார்கள். உங்களுக்கு சோகம் ஏற்படும்போதெல்லாம் சாய்ந்து கொள்ள தங்கள் தோளை தயாராக வைத்திருப்பார்கள். இவர்களின் பொறாமை எண்ணம் மட்டுமே இவர்களின் சிறிய குறையாகும்.
சின்ன சின்ன ஆச்சரியங்கள் மூலம் உங்களை அதிக மகிழ்ச்சியாக்க கூடியவர்கள். தங்கள் துணைக்கான மதிப்பையும், வெற்றிடத்தையும் வழங்க இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.
கும்பம்
உங்களுக்கு காதலும், இனிமையும் அதிகம் தேவையெனில் நீங்கள் விரும்ப வேண்டியது கும்ப ராசி ஆண்களைத்தான். இவர்கள் மிகச்சிறந்த துணையாக விளங்குவார்கள், ஏனெனில் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் துணையின் தேவைகளை ஒருபோதும் நிராகரிக்க மாட்டார்கள். காதலால் நிறைந்த இவர்களின் இதயம் எப்பொழுதும் தங்கள் துணைக்கு நேர்மையாகவும், உணமையாகவும் இருக்கும். இவர்களின் அதீத காதலே சிலசமயம் குறையாக மாறக்கூடும். இந்த சிறிய குறை எப்பொழுதும் அவர்களை நிராகரிக்க காரணமாக இருக்காது.