தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.
இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
மேஷம்: அனுகூலமான நாள். முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்கி விடுவது நல்லது.
ரிஷபம்: புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி வழக்கமான பணிகளில் பிரச்னை எதுவுமிருக்காது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.
மனதில் அவ்வப்போது சலனம் ஏற்பட்டு நீங்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலால் உடல் அசதி உண்டாகக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
மிதுனம்: மனதில் சிறு சலனம் ஏற்பட்டு நீங்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம்: புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகக் கிடைக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வழியில் சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.
சிம்மம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டியிருக்கும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படக்கூடும்.
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காலையிலேயே எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும்.
கன்னி: உற்சாகமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.
வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வேலைக்குச் செல்லும் அன்பர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
துலாம்: தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.
தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படக்கூடும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
தனுசு: புதிய முயற்சி சாதகமாக முடியும். தந்தை வழியில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். சிலருக்குக் குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
மகரம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
தந்தை வழி உறவினர்களால் மன உளைச்சல் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
கும்பம்: இன்று சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். தெய்வ வழிபாட்டின் மூலம் பிரச்னைகளைச் சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
சிலருக்கு வீண் அலைச்சலால் உடல் அசதி ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சற்று சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகப் பிரச்னைகள் ஏற்படக் கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுவது ஆறுதல் தரும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.
மீனம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.
சிலருக்கு திடீர்ப் பயணம் ஏற்பட் டாலும், ஆதாயம் தருவதாக இருக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வருகை யால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.