கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட பிரேஸ்லெட் ஒன்று பப்புவா நியூ கினியாவில் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவருமான ரதுல் நரைன் கடந்த 2016 ஆம் ஆண்டு பெம்பு என்ற ஹைபோதெர்மியாவை எச்சரிக்கும் பிரேஸ்லெட் ஒன்றை கண்டறிந்தார்.
8 கிராம் எடைகொண்ட அந்த பிரேஸ்லெட்டை யுனிசெஃப் குளிர் பிரதேசங்களில் வாழும் எடை குறைந்த குழந்தைகளின் உயிரைக் காக்க பயன்படுத்தப்படுகிறது.
இரண்டரை கிலோவுக்கும் குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகளின் மணிக்கட்டில் இதைக் கட்டிவிட்ட பின், வெப்ப நிலை சராசரியைவிடக் குறையும்போது பெற்றோரின் நீண்ட வெதுவெதுப்பான அணைப்பைக் கோரி எச்சரிக்கை மணி ஒலிக்கும்.
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருப்பின் அந்த அவசரத்தையும் பெம்பு பிரேஸ்லெட் எச்சரிக்கும்.
இதனை பிற குளிர்பிரதேசங்களிலும் குழந்தைகளைக் காக்க பயன்படுத்த வாய்ப்புள்ளது.
ஆனால் ஒரு மாத ஆயுள் கொண்ட பிரேஸ்லெட் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பேட்டரி கொண்டது என்பதாலும்,
விலை இந்திய மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய் என்பதாலும் இதனை மேம்படுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.