மஹியங்கனை பிரதான பாதையில் 18 வளைவுகள் உள்ள இடத்தில் பஸ் வண்டி ஒன்று விபத்திற்குள்ளாகியதில் 11 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
கண்டி பிரதேசத்தில் உள்ள மரண வீடு ஒன்றில் கலந்துக் கொண்ட பின்னர் தெஹிஅத்தகண்டிய பிரதேசத்திற்கு கண்டி- மஹியங்கனை வீதியில் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
மேற்படி பஸ் வண்டி, கண்டி மஹியங்களை வீதியில் 18 வலைவுப் பகுதில் வைத்து பாதையைவிட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்து. அதில் பயனித்த 11 பேர் காயமடைந்து ஹசலக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் வித்தில் காயமடைந்தவர்களுல் பஸ் வண்டியின் சாரதியும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், காயமடைந்தவர்களில் இருவரை மேலதிக சிகிச்சைக்காக மஹியங்களை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்தனர்.