வெளிநாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி சுமார் 50 இலட்சம் ரூபாய் வரையில் பல இளைஞர்களை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, மோசடியாக பெற்றுள்ளார்.கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரி போன்று நடித்து பணம் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த பெண் சுமார் 3 வருடங்கள் இவ்வாறு நடித்து ஏமாற்றி வந்துள்ள நிலையில் வாடகை வீடு ஒன்றிலேயே வசித்து வந்துள்ளார்.மிகவும் துணிச்சலான முறையில் இந்த மோசடி மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் தொழிற்சாலை ஒன்றில் தொழில் பெற்றுத் தருவதாக இரண்டு இளைஞர்களிடம் 2 லட்சம் ரூபாயில் இருந்து பெருந்தொகை பணம் மோசடி செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.