பாடசாலை பரீட்சைகளுக்காக ஒன்லைன் இணையத்தளம் மூலமாக இம்முறை மேற்கொள்ளப்பட்ட உயர்தரம் மற்றும் சாதாரண தர தொழில்நுட்ப பரீட்சை வெற்றியடைந்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்காக 2017ஆம் ஆண்டில் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் வழிகாட்டலில் புத்திஜீவிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவின் சிபாரிசுகளை கொண்ட டிஜிட்டல் மய நடவடிக்கையின் கீழ் கல்வி பொது தராதர உயர்தர வகுப்பு தரம் 12 மாணவர்களுக்காக நடத்தபடும் பொது தகவல்கள் தொழில்நுட்ப பரீட்சை ஜி.ஜ.டி – இணையத்தளம் மூலம் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரீட்சை கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை நடைபெற்றது. நாடு முழுவதிலும் உள்ள 655 கணணி மத்திய நிலையங்களில் 186 000 மாணவர்கள் இந்த பரீட்சைக்கு தோற்றினர். இது இறுதி பரிசோதனை மே மாதம் நடைபெறவுள்ளது.
இதில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டலுக்கான பயிற்சி வழங்கப்பட்டிருந்தன.
எதிர்காலத்தில் செயல்திறன் பரீட்சை கல்வி பொது தராதர மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் செயல்திறன் பரீட்சைகளை இவ்வாறு நடத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.