யாழ்ப்பாணத்தில் ஹெரொயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரின் வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சந்தேகநபர் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.அதனை செலுத்த தவறின் 2 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 19 மில்லிகிராம் ஹெரொயின் போதைப்பொருளுடன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கமைய நேற்று வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.