சுத்தமான குடிநீரின்றி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான நிதியம் யு.என்.எச்.சி.ஆர் இதனைத் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டினால் பெரும்பாலான குழந்தைகள் உயிரிழப்பதாக அந்த நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டதுடன், வருடாந்தம் மார்ச் 22ஆம் திகதி உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சுகாதார சீர்கேடுகளால் 15 வயதிற்குட்பட்ட 85,700 குழந்தைகள் வருடாந்தம் உயிரிழப்பதாக யு.என்.எச்.சி.ஆர் தெரிவித்துள்ளது.
இவர்களில் 5 வயதிற்குட்பட்ட 72,000 குழந்தைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பர்கினா பஸோ, கெமரூன், ச்சாட், எத்தியோப்பியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகில் 663 மில்லியன் மக்கள் பருகும் குடிநீர் சுத்தமானதாக இல்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.