Loading...
கொட்டாவ , பன்னிபிட்டிய பிரதேசத்தில் வர்த்தகரை அவரது மனைவி கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியுடன் குறித்த நபருக்கு கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
தாக்குதலுக்கு உள்ளான கணவர் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொட்டாவ பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...