இரண்டாவது ரி20 கிரிக்கெட் போட்டியிலும் 16 ஓட்டங்களால் இலங்கை தோல்வியடைந்தது. இதன்மூலம் தொடரை 2-0 என தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
நியாயமாக பார்த்தால், இந்த 16 ஓட்ட தோல்வியே இலங்கைக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியது. ஏனெனில் படுமோசமான தோல்வியை இலங்கை சந்திக்கும் நிலைமையில், திடீரென பின்வரிசை சகலதுறை வீரர் இசுறு உதான சன்னதம் கொண்டதில், 84 ஓட்டங்களை அடித்து நொறுக்கினார். அதாவது இலங்கையின் மொத்த ஓட்டத்தில், பாதிக்கு மேல் இசுறு உதான பெற்றது.
செஞ்சூரியனில் நடந்த இந்த போட்டியில்நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்த போட்டியில் தென்னாபிரிக்கா சார்பில் மார்கரம், காஷீல் அறிமுகமானார்கள்.
தொடக்கவீரர் மார்கரம் 3 ஓட்டங்களுடன் இசுறு உதான பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 91.
பின்னர் ஹென்ரிக்ஸ், டுசன் இணைந்து ஸ்கோரை 125 வரை கொண்டு வந்தனர். ஹென்ரிக்ஸ் 65 ஓட்டங்களுடனும் (46 பந்து, 9 பவுண்டரி), டுசன் 64 ஓட்டங்களுடனும் (44 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தனர்.
கடைசிக்கட்டத்தில் களமிறங்கிய டுமினி 17 பந்தில் 33 ஓட்டங்கள் விளாசினார்.
பந்துவீச்சில் ஜெப்ரி வெண்டர்சே 4 ஓவர்களில் 25 ஓட்டங்கள் கொடுத்து சிக்கனம் காட்டினார். விக்கெட் இல்லை. மலிங்க 4 ஓவர்கள் 26 ஓட்டம் 1 விக்கெட். இசுறு உதான 4 ஓவர் 39 ஓட்டம் 1 விக்கெட் என வாங்கிக் கட்டினார். திசர பெரேராதான் பரிதாபம். 3 ஓவர் 45 ஓட்டங்கள்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
தொடக்க வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 0, குசல் மென்டிஸ் 4, கவிந்து மென்டிஸ் 0, திசர பெரேரா 22, டிக்வெல 20 என முன்வரிசை வீரர்கள் அணிநடை நடக்க, 837 என இலங்கை பரிதாபமாக தத்தளித்தது.
8ம் இலக்க வீரராக களமிறங்கிய இசுறு உதான வெளுத்துக்கட்டினார். 48 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரி என கடைசிவரை ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களை பெற்றார். ரி 20 போட்டிகளில் அவரது முதல் அரைச்சதம் இது.
பந்துவீச்சில் சிக்கனம் காட்டிய சம்சி 4 ஓவர்கள் 16 ஓட்டம் 2 விக்கெட். கிறிஸ் மொரிஸ் கடைசிக்கட்டத்தில் இசுறு உதானவிடம் வாங்கிக்கட்டி 4 ஓவர்கள் 32 ஓட்டம் 3 விக்கெட்.
ஆட்டநாயகன் அரைச்சதமடித்த டுசன்.