Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணம் செய்யவிருந்த வீதியில் வாழை மரங்களை நட்ட இளைஞன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி அவர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Loading...
கடந்த 21ம் திகதி இந்த இளைஞன் கைதானார். விஜயபாபுரவில் இருந்த அரலகங்வில செல்லும் வீதியில் இந்த இளைஞன் நான்கு வாழைமரங்களை நட்டுள்ளார். நீண்டகாலமாக திருத்தப்படாமல் இருந்த வீதி குறித்து, ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கவே அவர் இதனை செய்துள்ளார்.
இதை அவதானித்த பொலிசார், இளைஞனை கைது செய்து, மன்னம்பிட்டி நீதிமன்றத்தில் நிறுத்தினர். ஏப்ரல் 5ம் திகதி வரை இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Loading...