Loading...
வவுனியாவில் அறுவடை செய்யப்பட்ட வயல்கள் தற்போது எரியூட்டப்பட்டுள்ளதனால் அந்தப் பகுதிகள் பெரும் புகைமூட்டமாகக் காணப்படுகின்றன.
பூந்தோட்டம் வீதியின் இருபுறமும் உள்ள வயல்கள் கடந்த சில நாட்களாக எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதி வவுனியா பொது வைத்தியசாலைக்குப் பின்புறமாக உள்ளது.
Loading...
வயல்கள் எரியூட்டப்படுவதால் வைத்தியசாலையின் சுற்றுப்புறம், பஸ் நிலையப் பகுதி, ஏ-9 வீதி என்பன புகைமூட்டமாகக் காட்சியளிக்கின்றன.
தற்போது கடும் வெப்பமான காலநிலை நிலவுகின்றதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
Loading...