இன்று உணவில் சுவைக்காக சேர்க்கும் பொருட்களில் பஞ்சமே இல்லாமல் கலந்து இருக்கிறது பல ஆபத்து.
உதாரணமாக எடுத்து கொண்டால் அஜினோமோட்டோவில் கலந்திருக்கும் மோனோ-சோடியம்குளுட்டோமேட் (MSG) உயிரை பறிக்கும் விஷமாகும்.
இது ஆரம்பத்தில் ஒற்றைத் தலைவலி சோர்வில் ஆரம்பித்து பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கக் கூடியது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதை உணர்ந்த சீனா தங்கள் நாட்டில், அஜினோமோட்டோவைத் தடை செய்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சீனா தன் உபயோகத்தைத் தடை செய்திருக்கிறதே தவிர, உற்பத்தியைத் தடை செய்யவில்லை.
அதாவது, உள்ளூரில் தடை செய்யப்பட்ட அஜினோமோட்டோவைத் தான் இந்தியாவுக்கு அனுப்பிவருகிறது. இந்தியாவில் அஜினோமோட்டோவின் ஆபத்தை உணர்ந்து தடை செய்வது அரசின் கையில் இருக்கலாம்.
ஆனால், நம் வீட்டுக்குள் அஜினோமோட்டோ வராமல் தடுக்கும் வாய்ப்பு நமது கரங்களில்தான் இருக்கிறது.
மனிதனுக்கு விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமானது. மக்களே உஷாராக இருக்கவும்.