தமிழ் சினிமாவில் போட்டியின்றி ரசிகர்கள் எல்லோருக்கும் பிடித்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவரின் மகன் துருவ் ‘வர்மா’ என்ற படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமாக இருந்தார். தெலுங்கில் வெற்றியடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்கை இயக்குனர் பாலா இயக்கயிருந்தார் ஆனால், சில பல காரணங்களால் இந்த படம் அவரிடமிருந்து கைமாறியது.
தற்போது இப்படத்தை ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் இயக்கவுள்ளனர். இன்னும் படத்தின் படப்பிடிப்புகள் துவங்காமல் இருந்து வருவதால் ஹாயாக இருந்து வரும் துருவ்விற்கு அப்பா விக்ரம் சில டிப்ஸ்களை கொடுத்துவருகிறாராம்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விக்ரமும் மகன் துருவும் இணைந்து சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட அதற்கு ரசிகர்களின் அதிக வரவேற்பு கிடைத்து லைக்ஸ்களை குவித்து வருகிறதது. துருவும் விக்ரமும் ஒரே கெட்டப்பில் இருப்பது பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.