நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் நயந்தாரா பற்றி பேசியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
“நயன்தாரா நல்ல நடிகை. இவ்ளோ நாள் தம் கற்றதே பெரிய விஷயம். அவங்களை பற்றி வராத (தப்பான) செய்தியெல்லாம் இல்லை. அதையும் தாண்டி நிக்கிறாங்க. தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வெச்சுப்பாங்க. அப்புறம் விட்ருவாங்க. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறாங்க, சீதாவாகவும் நடிக்கிறாங்க. அப்போலாம் கடவுளாக நடிங்க கே.ஆர்.விஜயா போன்றவர்களை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேணும்னாலும் நடிக்கலாம். பார்த்தவுடனே கும்பிடறவங்களையும் போடலாமா, பார்த்தஉடனே கூப்பிடுறவங்களையும் போடலாம்” என ராதாரவி கூறியுள்ளார்.
நயன்தரா பார்த்தவுடன் கூப்பிடுகிறவர் போல இருக்கிறாரா? என சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடகி சின்மயி கேட்டுள்ளார்.