சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். மா.கா.பா.ஆனந்தும் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகிகளில் பிரியா பவானி சங்கரும் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
தற்போது மற்றொரு கதாநாயகி சின்னத்திரையிலிருந்து அறிமுகமாக உள்ளார். சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வாணி போஜன் வைபவ் நடிக்கும் சிக்சர் படத்தில் இணைந்துள்ளார்.
எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்தப் படத்தில் பலாக் லால்வாணி வைபவக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் மற்றொரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வாணி திரையுலகில் நுழைகிறார்.
சஸ்பென்ஸ் திகில் படமாக உருவாகும் இந்த படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார். படத்தில் இணைந்தது குறித்து வாணி போஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பழைய நண்பர் நிதின் சத்யா. அவரால் இந்த அறிமுகப் படம் கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில் வைபவ் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.