பிரித்தானியாவில் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை வைத்தியர்கள் வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளனர்.
ஹரினி ராசலிங்கம் என்ற சிறுமியே இவ்வாறு உயிருக்கு போராடியுள்ளார். திடீர் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி 6 நாட்களில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மகளின் உடலில் என்ன நோய் என வைத்தியர்களினால் கண்டுபிடிக்க முடியாமையினால் Evelina லண்டன் சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஹரினியின் தாய் திட்டமிட்டார். எனினும் இந்த நோயானது மிகவும் அரிய ஒன்றாகும்.
இது maple syrup என்ற சிறுநீர் நோயாக இது இருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகித்தனர்.
இது அரிய வகை நோயாக இருந்தாலும் உயிரை பறிக்கும் ஆபத்தை கொண்டதாகவும். இந்த நோயினால் எந்தவொரு வாசனையும் நுகர முடியாது. உடல் வியர்க்கும். புரத உணவுகள் உடலில் சேரவிடாமல் தடுக்கும்.
இந்த நோயினை இரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும். எனினும் இரத்த பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்னரே ஹரினி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஹரினியின் 30 வயதான தாய் பிரிமினி கமலநாதனிடம் மகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வைத்தியர்கள் தீவர ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.
ஒரு நாள் திடீரென அவரது உடலில் இருந்த நீர்த்தன்மை முழுமையாக உறிஞ்சப்பட்டது. இதன் போது என்ன நடக்கின்றதென தெரியாமல் வைத்தியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
ஹரினி முழுமையாக இயந்திரங்கள் பொருத்தப்பட்ட ஒரு கோழி போன்று காணப்பட்டார். நான் அவரை பார்க்கும் போது கண்ணீர் விட்டு அழுதேன் என தாயார் தெரிவித்துள்ளார்.
Evelina, வைத்தியசாலைக்கு ஹரினி மாற்றப்பட்டார். அங்கு அவரது வித்தியசமான செயற்பாடுகளை வைத்தியர்கள் அவதானித்தார். இந்த சிறுநீர் நோய் மிகவும் ஆபத்தானது. ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் உயிரிழக்க நேரிடும். எனினும் ஒருவாறு அவரது நோய் கண்டுபிடிக்கப்பட்டது.
3 வாரங்கள் அவசர சிகிச்சை பிரிவில் ஹரினி அனுமதிக்கப்பட்டார். வைத்தியர்களின் தீவிர கண்கானிப்பில் அவர் குணமடைந்தார். அவரது உடலில் இருந்த அமினோ அமிலம் நீக்கப்பட்டது. தற்போது இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.
ஹரினி மகிழ்ச்சியாக இருக்கின்றார். ஆரோக்கியமாக உள்ளார். புரதம் கொண்ட உணவுகளை உட்கொள்கின்றார். உயிரிழக்கும் நிலையில் மகள் காப்பற்றப்பட்டார். நாங்கள் அதிஷ்டசாலி என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
Maple syrup urine disease என்ற நோய், ஒரு புரதக்கோளாறு ஆகும். இது உடலிலுள்ள புரத கட்டிகள் (அமினோ அமிலங்கள்) ஒழுங்காக செயல்பட முடியாத ஒரு மரபணு நோய்.
வாந்தி, உடலில் ஆற்றல் இல்லாதிருத்தல், அசாதாரண இயக்கங்கள் மற்றும் தாமதமான உடல் வளர்ச்சி போன்ற பாதிப்புகள் இந்த நோயால் ஏற்படுகின்றன.