ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர யாழ்ப்பாணத்தில் காதல் ரோஜாவே என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி கூட்டமொன்றில் அவர் இந்தப் பாடலை பாடியுள்ளார்.
பாடல் பாடிய தயாசிறி ஜயசேகரவிற்கு குழுமியிருந்தவர்கள் கரகோசங்களை எழுப்பி தங்களது ஆதரவினை வெளியிட்டிருந்தனர்.
இது புதிய பாடல் அல்ல பழைய பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் எனக் கூறி தயாசிறி ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் ரோஜா பாடலை பாடினார்.
இதற்கு முன்னரும் பதுளை பகுதியில் தயாசிறி ஜயசேகர தேர்தல் பிரச்சார மேடையொன்றில் தமிழ் பாடல் ஒன்றை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாசிறி ஜயசேகர பிரபல தொலைக்காட்சிகளில் இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளதுடன், இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.