Loading...
கடந்த 30 வருடங்கள் கொடிய போரால் வடக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தப் போரின் அனுபவங்கள் உங்கள் எல்லோருக்கும் உள்ளன என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Loading...
நாங்கள் அமைதியாக இரவில் நித்திரை கொள்ளும்போது நீங்கள் பயத்துடன் நித்திரை கொண்டீர்கள். உறவுகளை இழந்தும் தொலைத்தும் இருக்கின்றீர்கள். இந்தத் துர்ப்பாக்கிய நிலைக்கு மன்னிப்புக் கோருகின்றேன் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Loading...