அவுஸ்ரேலிய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி பெற்றிருந்தது.
இதன்காரணமாக இன்றைய போட்டியிலும் வெற்றி பெரும் முனைப்புடன் அவுஸ்ரேலிய அணி களமிறங்கும் என நம்பலாம்.
மறுபுறத்தில் முதல் போட்டியிலடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெரும் முனைப்புடன் பாகிஸ்தான் அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.