ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுக்கு ஏற்றவாறு எதிர்கால பலன்களை ஜோதிடம் கணித்துக் கூறுகிறது. ஆனால் இந்த பலன்கள் அனைவருக்கும் பலிக்கும் என்று கூற முடியாது.
சிலருக்கு ஜோதிடம் பலிக்காமல் போவது ஏன்?
காலம், நேரம், கிரகங்களின் சுழற்சி ஆகியவை ஈர்க்கும் சக்தியாக இருக்கும் போது, நமது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் எங்காவது சிறு மாறுதல் நடக்கும் போது ஜோதிடப் பலன்கள் சில நேரங்களில் தவறி விடும். அதனால் சிலருக்கு ஜோதிடம் கூறும் பலன்கள் சில நேரத்தில் பலிக்காது.
ஜோதிட பலன்கள் யாருக்கெல்லாம் பலிக்காது?
நவகிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு பாவத்தில் நின்றால், அவர்களுக்கு ஜாதகம் பலிக்காது.
5 அல்லது 6 கிரகங்கள் நீசம் பெற்று இருந்தால், அவர்களின் வாழ்க்கை சாலை ஓரங்களில் வாழக்கூடிய நிலை உண்டாகும். இத்தகைய ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு ஜோதிடப் பலன்கள் பலிக்காது.
ஒருவரின் ஜாதகத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தால் அவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
லக்னத்துக்கு பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் என்று இருந்தால், அவர்கள் வாழ்வில் வறுமை நிலையே நீடிக்கும். இவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
கேதுவுடன் 4 கிரகங்கள் சேர்ந்து, ராகுவுடன் 3 கிரகங்கள் சேர்ந்து இருப்பவர்களுக்கு ஜாதகம் கூறினால் அது பலிக்காது.
எவ்வளவு யோகம் இருந்தாலும் அவர்களின் ஜாதகத்தில் கேதுவை நோக்கி அனைத்து கிரகங்களும் சென்று கொண்டே இருந்தால், அவர்களுக்கு ஜாதக பலன் பலிக்காது.
அமாவாசை திதியில் பிறந்து சூரியன்-சந்திரன்-சனி ஆகிய கிரகங்கள் ராகு அல்லது கேதுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது சூரியன், சந்திரன்-சனி இவர்கள் நீசம் பெற்றாலோ அவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
அஷ்டமி திதியில் பிறந்து, சூரியன்-சந்திரன்-குரு-செவ்வாய்-சனி ஆகிய ஐந்து கிரகங்கள் ஒரே பாவத்தில் நின்று இருந்தால், அவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
ஜோதிடம் பலிக்க பரிகாரம் என்ன?
ஜோதிட பலன்கள் பலிக்க வேண்டுமெனில், ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டு வர வேண்டும்.