பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது நால்வரும் அளித்துள்ள வாக்குமூலம் மூலம் இவ்வழக்கில் மேலும் பலர் சிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி அளித்த புகாரின் பேரில் தான் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த மாணவியின் பெயர் வெளியிடப்பட்ட நிலையில் அதை வெளியிட்ட கோவை எஸ்.பி, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.