Loading...
அமெரிக்காவில் 19 வயதான இளம்பெண் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பார்க்லாந்தை சேர்ந்தவர் சிட்னி அயல்லோ (19). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தார். வீட்டில் இருந்த அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Loading...
கடந்த ஆண்டு இவர் படித்த பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். அதில் இவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதிலிருந்து மனஅழுத்தத்தில் இருந்து வந்தார். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என அவரது தாயார் கேரா தெரிவித்துள்ளார்.
Loading...