எரிபொருள் சுத்திகரிப்பு தொழிற்சாலையின் மூலம் நேரடியாக 1500 பேர் தொழில்வாய்ப்புக்களை பெற உள்ளனர். அதேபோன்று மறைமுகமாக 3 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பும் கிடைக்க உள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அன்று முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார். அந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியினர் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார்கள்.
அதேபோன்று இந்தத் திட்டம் தொடர்பிலும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.
இந்த நிகழ்வின் போது அமைச்சர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள இளைஞர் முகாமுக்காக தனது சொந்தப் பணத்தில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நன்கொடையாக வழங்கினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா, பிரதமரின் பொருளாதார முகாமைத்துவம் மிகவும் உயர்தரத்தைக் கொண்டதாகும் என்று தெரிவித்தார். பிரதமர் அபிவிருத்தி மற்றும் ஜனநாயகத்திற்கான தன்னை அர்ப்பணித்து முன்னின்று செயற்படுவதாகவும் அவர் கூறினார்.