யாழ்.மாநகரசபை எல்லைக்குள் பொது இடங்களில் விளம்பரங்கள் ஒட்டுவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுவ தாக யாழ்.மாநகரசபை முதல்வா் இ.ஆனோல்ட் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு நிறுவனங்களாக இருந்தாலும் விளம்பரங்களை காட்சி ப்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் சபை உறுப்பினர் வ.பார்த்தீபனால் சபையில் முன்வைக்கப்பட்டது.
அதற்கமைவாக தனியார் அல்லது அரச நிறுவனங்கள், அரசி யல் சார்ந்த கட்சிகள், திரையரங்கள்,கல்வி நிறுவனங்கள் அவர்கள் சார்ந்த விளம்பரங்களை பொது மக்களுடைய மதில்கள், சுவர்கள், அரச திணைக்களங்களில் சுவர்களிலோ, பொது இடங்களில் சுவர்களிலோ ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலை மீறிச் செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.