Loading...
கோலிவுட், டோலிவுட் இரண்டிலும் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா, நாகார்ஜூனன் மகன் நாக சைதன்யாவை காதலித்து வருவது தெரிந்ததே. இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திருமணம் நடைபெறும் மாதத்தை அறிவித்துள்ளனர்.
நாகசைதன்யாவின் சகோதரர் அகில் திருமணம் வரும் மே மாதமும், நாகசைதன்யா-சமந்தா திருமணம் வரும் ஆகஸ்ட் மாதமும் நடைபெறும் என்று இருவீட்டார் அறிவித்துள்ளனர். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Loading...
சமந்தா கிறிஸ்துவர் என்பதால் முதலில் கிறிஸ்துவ முறைப்படியும் பின்னர் இந்து முறைப்படியும் திருமணம் நடைபெறும் என்றும் இந்த திருமணத்திற்கு தென்னிந்திய திரையுலகை சேர்ந்த அனைவரும் அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Loading...