நம் அனைவருக்கும் பூண்டின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியும். ஆனால் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் மூச்சி திணரல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.
இவ்வாறு வெறும் பூண்டை சாப்பிடும் போது அது உணவுக்குழாய்களில் சிறிது எரிச்சலையும் ஏற்படுத்தலாம்.
பூண்டு உண்மையிலேயே ஒரு மிகச்சிறந்த மருத்துவ பொருள் தான்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ பூண்டிற்கு கண்டிப்பாக பொருந்திடும். உடலில் இருக்கிற பாக்டீரியா தொற்றினை அகற்ற நீங்கள் சாப்பிடுவீர்களானால் மீடியம் சைஸ் பூண்டு இரண்டு அல்லது மூன்று போதுமானது.
நேரடியாக சாப்பிடுவதை விட குழம்பு, ரசம் ஆகியவற்றில் பூண்டு சேர்த்து பயன்படுத்தலாம். இரண்டு பூண்டு சாப்பிட வேண்டிய இடத்தில் ஆறு பூண்டு சாப்பிட்டால் பாக்டீயா உடனடியாக கட்டுக்குள் வரும் என்றெல்லாம் கணக்கு போடாதீர்கள். அது உங்களுக்கே பின் விளைவுகளை ஏற்படுத்திடும்.
வெறும் வயிற்றில்….
சிலர் காலையில் வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். பூண்டினை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் சாதரண தண்ணீரையோ அல்லது எலுமிச்சை கலந்த தண்ணீரையோ குடிக்கலாம். காலை உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளுங்கள்.
வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி, செரிமானக் கோளாறு, வயிற்றுப் போக்கும் வாந்தி ஆகியவை ஏற்படும்.