Loading...
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொடை பிரதேசத்தில் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்படும் துப்பாக்கியொன்றும் அதற்கு பயன்படுத்தக் கூடிய 5 துப்பாக்கி ரவைகள் என்பன கைபற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேநபர் முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது
Loading...