பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் சரிகமப என்ற நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடைபெற்றது.
இதில் முதல் பரிசை வர்ஷா என்பவரும், இரண்டாம் பரிசை சென்னையில் வீட்டு வேலை செய்து வரும் 63 வயதான ரமணியம்மாள் என்பவரும் வென்றனர்.
இந்த ஷோவை ரமணியம்மாளுக்காகவே பலரும் பார்த்தனர். இதன் காரணமாகவே அந்த டிவியின் TRP எகிறியது என்று கூறலாம்.
இந்நிலையில் அவரிடம் சமீபத்தில் இரண்டாம் பரிசு வென்றீர்களே என்ன செய்தீர்கள் என்று கேட்ட போது, இரண்டாம் பரிசுக்கு 5 லட்சம் ரூபாயும், 5 செண்டு நிலமும் தருவதாக அறிவித்தனர்.
அதில், ஒரு லட்சம் ரூபாயை தனியார் கம்பெனி ஒன்று தரும் என்று சொன்னார்கள், அவர்களிடம் கேட்டால், நாங்கள் பணமாக தரமாடோம், எங்காவது வெளிநாடு செல்வதாக இருந்தால் சொல்லுங்கள் பிளைட் டிக்கெட் போட்டு தாரோம் என்று சொல்லியதால் அதை விட்டுவிட்டேன்.
அதன் பின் 4 லட்சம் ரூபாயில் வரி போக 2,80,000 ரூபாய் கிடைத்தது. இதை ஏழு பிள்ளைகளுக்கும் 40,000 பிரித்து கொடுத்துவிட்டேன். நான் அதில் ஒரு பைசா கூட எடுக்கவில்லை.
நிலம் திண்டிவனம் அருகே இருக்கு என்று சொன்னார்கள், அங்கே விவசாயம் தான் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அந்த நிலத்தோட மதிப்பின் பாதி பணத்தை கூட கொடுத்தால் போதும், ஆனால் இப்போது வரை நிலம் கைக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்