நயன்தாரா நடித்த ‘கொலையுதிர்க்காலம்’ திரைப்படம் ஒரிரு வருடங்களாக தாமதமாகி வருகிறது. இந்த படம் ஆரம்பிக்கும்போது இருந்த பல தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்று யுவன்ஷங்கர் ராஜாவே சமீபத்தில் கூறினார்
எனவே இந்த படத்தை திடீரென புரமொஷன் செய்யும் வகையில் நேற்று டிரைலர் ரிலீஸ் விழா நடத்தப்பட்டது.
அதில் சம்பந்தமே இல்லாமல் ராதாரவி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். எதிர்பார்த்ததுபோலவே அவர் இந்த விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதிலும் நயன்தாரா குறித்து அவர் கூறிய ஒரு கருத்து திரையுலகினர்களையே அதிர்ச்சி அடைய செய்தது
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், ராதாரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மூன்று டுவீட்டுக்களை இன்று பதிவு செய்து தனது ஆதங்கத்தை தெரிவித்தார். விக்னேஷ்சிவனின் டுவீட்டுக்கு பதிலளித்த ராதிகா,
இன்று நான் ராதாரவியை சந்தித்து அவர் பேசியது தவறு என்று கூறினேன். நயன்தாரா போன்று ஒரு தொழில்பக்தி உள்ள நடிகையை பார்க்க முடியாது.
அவரை பற்றி நன்கு தெரிந்தவர் என்ற வகையில் ராதாரவி பேசியது தவறு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.