வட மேற்கு லண்டனில் இலங்கையை சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Pinner பகுதியில் நேற்றிரவு (24-03-2019) இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இலங்கையை சேர்ந்த ரவி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.
ரவி மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு காவல் துறை அழைக்கப்பட்ட போதிலும் சம்பவம் இடம்பெற்று 45 நிமிடங்களில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவர் தொடர்பில் கருத்து வெளியிட்டவர்கள், “அவரது பெயர் ரவி, அண்மையில் அவரது மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் அன்பான மனிதன். இரக்க குணமுடைய சிறந்த நபர். அவர் கண்ணாடி அணிந்திருப்பார்.
அப்பாவியான இந்த நபர் பணி செய்ய சென்ற போது கொலை செய்யப்பட்டதென்பது மிகவும் கொடுமையான விடயமாகும். அன்பான ஒருவரை திருட்டு சம்பவத்தினால் இழந்துவிட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இந்த கடையில் 6 மாதங்களுக்கு முன்னரும் இதேபோன்று கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியால் இரவில் இவ்வாறு தொடர் கொலைகள் இடம்பெற்று வருதென்பது வேதனை அளிப்பதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லன்ட் யார்ட் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.