Loading...
இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் பணிக்குழாமுடன் கூடிய ஜெர்மனிக்கு சொந்தமான அன்னா எலிசெபத் என்ற கப்பல் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமக்கு உரிய முறையில் உணவு மற்றும் வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என குறித்த கப்பலின் பணிக்குழாமினர் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ததன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் தற்போது தென் அவுஸ்திரேலியாவில் கெம்லா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
எதிர்வரும் 14 நாட்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படவில்லை என 17 பேர் கொண்ட பணிக்குழாம், அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...