நான்கு இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளை பூநகரி பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பூநகரி, அரசர்கேணி பகுதியிலிருந்து கிளிநாச்சிக்கு கெப் ரக வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட முதரை மர குற்றிகளே இவ்வாறு பொலிஸாரால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.
பூநகரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஆளங்கேணி பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, அவ்வீதியூடாக சென்ற கெப் ரக வாகனத்தை பொலிஸார் சோதனையிட்டபோது, பெறுமதிவாய்ந்த மர குற்றிகளை மீட்டுள்ளனர்.
ஆனால் மரக்குற்றிகளை ஏற்றிவந்த வாகன சாரதி மற்றும் உதவியாளர் தப்பி சென்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பூநகரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக சட்டவிரோத மரக்கடத்தல் மற்றும் மண் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.