நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு மாதம் வரை நீடிக்கும் என மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாத இறுதிக்குள், மாற்று வழிகள் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில் தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தகாலம் முடிவடைந்து தற்போது மூடப்பட்டுள்ள மாத்தறை மின்நிலையம் மற்றும் ஏஷியா பவர் ஆகிய மின்நிலையங்களின் ஒப்பந்தகாலத்தை மேலும் 2 வருடங்களுக்கு நீடிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ள அட்டவணைக்கு அமைவாக நேற்று முதல் மின்சார விநியோகத்தைத் துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பகல் வேளையில் 3 மணித்தியாலங்களும் இரவில் ஒரு மணித்தியாலமுமாக நாளாந்தம் 4 மணித்தியாலங்களுக்கு மின்சார விநியோகத்தை துண்டிப்பதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்சார சபையின் அறிவித்தலுக்கு அமைய காலை 8.30 மணியிலிருந்து முற்பகல் 11.30 மணி வரை அல்லது முற்பகல் 11.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை அல்லது 2.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையான 3 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
இதேவேளை, மாலை 6.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை ஒரு