பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் மீண்டும் கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போதே அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாலக டி சில்வாவிற்கு எதிரான இன்றைய வழக்கு விசாரணைகளின் போது அவரால் திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொலை சதி செயலுக்கான ஆதாரங்கள் போதியளவு காணப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.